‘உங்களை போல் நான் இல்லை’ ரோஜாவை வெளுத்து வாங்கிய சன்னி லியோன் – காரணம் இது தான்

0
1666
- Advertisement -

உங்களைப் போல் நான் இல்லை என்று நடிகை ரோஜாவிற்கு சன்னிலியோன் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி,, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களிலும் ரோஜா நடித்து இருந்தார்.

- Advertisement -

ரோஜா திரைப்பயணம்:

அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். மேலும், இளம் வயதிலேயே ரோஜா படு கிளாமராகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார்.

ரோஜா அரசியல்:

அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. தற்போது ரோஜா அவர்கள் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தும் அப்பகுதியில் தொகுதி சுற்றி பணியாற்றி வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகளை செய்து இருந்தார் ரோஜா. இந்த நிலையில் சமீபத்தில் ரோஜா அவர்கள் பவன் கல்யாண் மற்றும் சன்னி லியோன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

பவனை விமர்சித்த ரோஜா:

அதாவது, ஆந்திராவில் பவன் கல்யாண் தனது வராஹி யாத்திரையின் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதனால் கோபம் அடைந்த ரோஜா அவர்கள் பவனை பழிவாங்கும் எண்ணத்தில் சன்னி லியோனை இணைத்து வைத்து இது சன்னி லியோன் வேதம் ஓதியது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி ரோஜா பேசியது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தன்னை விமர்சித்த ரோஜாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சன்னி லியோன் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.

சன்னி லியோன் வீடியோ:

அதில் அவர், நான் ஒரு ஆபாச நடிகை தான். ஆனால். அது என்னுடைய கடந்த காலம். அதை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்படவில்லை. உங்களைப் போல் நான் இல்லை. நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்தேன். ஆனால், நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறி விட்டேன். ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை என்று கூறி பேசியிருக்கிறார். இப்படி சன்னி லியோன் பதிவிட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு ரோஜா என்ன பதில் கொடுக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement