மும்பையை விட்டு வெளிநாடு பறந்த சன்னி லியோன். இவங்களுக்கு மட்டும் எப்படி விமானம் கிடைச்சது ?

0
3089
sunny
- Advertisement -

கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள். இதனால் அனைத்து போக்குவரத்து, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பல பிரபலங்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறர்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றுள்ளார். சன்னி லியோன் அவர்கள் சில தினங்களுக்கு முன் தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். எப்படி சன்னி லியோன் மட்டும் அமெரிக்கா சென்றார் என்றும் பல கேள்விகளை எழுப்பி வந்துள்ளனர்.

- Advertisement -

நடிகை சன்னி லியோன் அவர்கள் தன்னுடைய மூன்று குழந்தைகளின் பாதுகாப்பாக அமெரிக்கா சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர் 2000 ஆம் ஆண்டே மும்பையில் செட்டில் ஆனார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இவர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், சன்னி லியோன் அவர்களின் இந்தியாவை விட அமெரிக்காவில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Hindustantimes

-விளம்பரம்-

எப்படி இவர் சென்றார் என்று பல கேள்விகளை சோஷியல் மீடியாவில் எழுப்பியுள்ளார்கள். அதற்கு சன்னி லியோனின் கணவர் டேனியல் வெப்பர் அவர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, KLM என்ற அரசாங்க விமானத்தின் மூலம் தான் சன்னி லியோன் சென்றதாகக் கூறியுள்ளார். ஹாலிவுட்டில் ஆபாச நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் அவர்கள் தற்போது பாலிவுட் பட நாயகியாக வலம் வருகிறார்.

முதலில் இவர் ஹிந்தி மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்னர் சன்னி லியோன் அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் தென்னிந்திய மொழி படங்களில் அதிகம் நடிக்க வில்லை என்றாலும் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் ஈர்த்து உள்ளார் சன்னி.

Advertisement