25 ஆண்டுக்கு முன்னே சினிமாவில் அறிமுகம், பிரபுவுடன் முதல் படம் – சூப்பர் டீலக்ஸ் சுந்தரியின் அறிந்திராத பக்கம்.

0
634
Sundari
- Advertisement -

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம், நவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட கருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காகவே இவருக்கு தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இப்படத்தில் வரும் கேசட் வசன காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த காட்சியில் நடித்த சுந்தரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்கை மற்றும் சொந்த வாழ்க்கையை பற்றி பேசியிருந்தார். அவர் கூறியது “என்னுடைய சொந்த ஊர் மதுரை தான். நான் சென்னைக்கு திரைப்படம் தயாரிப்பதை பார்க்க வந்தேன். அப்போது நான் சுத்தி பார்த்து கொண்டிருக்கும் போது ஒருவர் என்னை சினிமாவில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் மதுரை என்றும் சுற்றிப்பார்க்க வந்தேன் என்று விளக்கம் கூறினேன்.

- Advertisement -

அதற்கு எப்படியோ பேசி எஸ்.பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான என்னுயிர் நீதானே படத்தில் வாய்ப்பு கிடைத்து. முதல் படமே பிரபுவுடன் ஒரு காட்சி வந்தது. பிறகு அப்படியே காலம் போனது அப்போதுதான் என்னுடைய கணவர் இருந்து விட்டார். பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் எனவே சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தேன். அந்த சினிமாதான் என்னுடைய வாழ்க்கைக்கு கைகொடுத்து. நான் 30 படங்களுக்கு மேலே சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

“எனக்கு வாய்த்த அடிமைகள்” என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து ஒரு காமெடி காட்சியில் நடித்து இருக்கிறேன் ஆனால்அது பிரபலமாகவில்லை. பைரவ படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருப்பேன். வேலைக்காரன் படத்திலும் நடித்திருக்கிறேன். இந்நிலையில் கடந்த 2019ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. ஆனால் அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தை நடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் படம் முடிந்த பிறகு கிடைத்த வரவேற்பு “அந்த படம் ஒரு கருத்து சொல்லும் படம் தான் மற்றவர்கள் சொல்வதை போல கிடையாது.

-விளம்பரம்-

அதற்கு பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி வந்திருந்தார் அப்போது குமராஜாவும் விஜய்சேதுபதியும் ஒன்றாக வந்தார்கள். கூட்டத்தில் இருந்த என்னை பார்த்த விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் அந்த கட்சிக்காக என்னை பாராட்டினார். ஆனால் வெளியில் என்னை ஏன் இந்த மாதிரியான காட்சிகளில் நடித்தீர்கள் என்று கோவப்பட்டார்கள். அந்த சூழ்நிலையில் என்னுடை கணவர் இறந்து விட்டார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். எனவே எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடிக்கிறேன் என்று தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.

எனக்கு மூன்று பிள்ளைகள் ஒரு பெண் இறந்து விட்டார். மற்றொரு பெண் கோவையில் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன், மகன் பெங்களூரில் இருக்கிறார். நான் எங்கள் வீட்டில் ஒரே பெண்தான் நல்ல வசதியாகத்தான் இருந்தோம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை எங்களை வறுமையில் தள்ளியது. அந்த நேரத்தில் சினிமாதான் எனக்கு கைகொடுத்தது. ஆனால் தற்போது சினிமாவை மட்டுமே பார்துகொல்லாமல் கிடைத்த வேலையை செய்து வருகிறேன். அதோடு ஐஸ்வர்யா வேலனிடன் beautism படித்திருக்கிறேன் எனவே அந்த வேலையையும் பார்த்துக்கொண்டு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன் என்று கூறினார் நடிகை சுந்தரி.

Advertisement