பொதுவாகவே சினிமா படங்களில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் வைத்து தான் கதைகள் அமையும். அதிலும் ஹீரோயினிகளுக்காக படங்களை பார்க்கிற ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கதையே இல்லை என்றாலும் கதாநாயகிகளின் கவர்ச்சி, காதல் காட்சியை பார்வையாளர்கள் மத்தியில் ஈர்த்து விடுகிறது. இதையெல்லாம் மீறி இயக்குனர்கள் கதாநாயகிகள் இல்லாமல் ரொமான்ஸ் இல்லாமல் சில அற்புதமான திரைப்படங்களை தமிழ் சினிமா உலகில் உலகில் கொடுத்திருக்கிறார்கள். அந்த படங்களின் பட்டியலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
ஆரண்ய காண்டம்:
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளிவந்த முதல் திரைப்படம் ஆரண்ய காண்டம்.
இந்த படத்தில் 6 பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ் உட்பட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெறவில்லை என்றாலும் காலப்போக்கில் படத்தினுடைய கதை பிடித்துப்போய் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தந்தது. இதனையடுத்து இந்த படத்தை தயாரித்த எஸ் பி பி சரண் மீண்டும் ஒருமுறை இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய முயன்றார். இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லாதபோது முக்கியத்துவம் வாய்ந்த பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இதையும் பாருங்க : வரலாற்று சிறப்புமிக்க கோயில்களின் சிற்ப டிசைன்கள், திருமண புடவையில் கூட அதிர்ஸ்டத்தை விரும்பிய நயன் – இதற்கு பின் இவ்ளோ பெரிய கதையா ?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இதனை மிஷ்கின் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து இருந்தார். இந்த படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டும் தான் இருந்தது. இதை இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி இருந்தது. படத்தில் கதாநாயகியும் கிடையாது. கதைப்படி மருத்துவ மாணவன் ஒருவனிடம் மாட்டிக்கொள்ளும் கில்லர் தான் செய்த தவறுக்காக வருந்தி நல்லது செய்ய முயலும்போது அவனை விடாது வில்லன்கள் துரத்துகிறார்கள். இறுதியில் அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இந்த படம் வெளியிடும்போது பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் காலப்போக்கில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்திலும் கதாநாயகி என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்த செருப்பு:
தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக ” ஒத்த செருப்பு சைஸ் 7″ என்ற படத்தை நடித்தும் , இயக்கியும் இருந்தார் பார்த்திபன். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தான். மற்ற கதாபாத்திரங்களின் முகம், உடல் எதுவும் காட்டவில்லை. அவர்களின் குரல் மட்டும் தான். பின் அவர்களை உணர்த்தும் பொருட்கள் காட்டப்பட்டிருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இந்த திரைப்படம் பல விருதுகள் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
துருவங்கள் பதினாறு:
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான், அஸ்வின் குமார், பிரகாஷ் ராகவன் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படம் துருவங்கள் பதினாறு. இந்தப் படம் கிரைம் இன்வெஸ்டிகட் திரைப்படம். இந்த படத்தின் மூலம் கார்த்திக் நரேன் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை யூகிக்க முடியாத அளவிற்கு பல சஸ்பென்ஸ் கதையில் வைத்திருந்தார்கள். படம் நல்ல வெற்றியைப் பெற்று இருந்தது. இந்த திரைப்படம் மூலம் கவர்ச்சிப்புயல் யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உன்னைப்போல் ஒருவன்:
சக்ரி டொலட்டி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் உன்னை போல் ஒருவன். இந்த படத்தில் கமல்ஹாசன், மோகன்லால், பாரத் ரெட்டி, லட்சுமி, கணேஷ் வெங்கட்ராமன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே (A wednesday) என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல். இந்த படம் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதேபோல் இந்த படத்தை மலையாளத்திலும் ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தார்கள். வெடிகுண்டு ஒன்றை ரிமோட் மூலம் வெடிக்க செய்து விடுவதாக அச்சுறுத்தி தீவிரவாதிகளை ரிலீஸ் செய்ய முயலும் கதையம்சம் கொண்டது. இந்த படத்தில் கதாநாயகி என்று யாருமே இல்லை.
கைதி:
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி, நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஒரு இரவில் நடக்கும் காட்சியை மிக அழகாக இயக்குனர் காண்பித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் படத்திலும் கதாநாயகி, பாடல், ரொமான்ஸ் எதுவும் கிடையாது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவதாகவும் கூறப்படுகிறது.
டிமாண்டி காலனி:
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் டிமாண்டி காலனி. இந்த படம் முழுக்க முழுக்க திகில் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனந்த், அபிஷேக் ஜோசப் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.