வரலாற்று சிறப்புமிக்க கோயில்களின் சிற்ப டிசைன்கள், திருமண புடவையில் கூட அதிர்ஸ்டத்தை விரும்பிய நயன் – இதற்கு பின் இவ்ளோ பெரிய கதையா ?

0
716
nayanthara
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆடை குறித்து தான். இவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். மேலும், இவர்களின் திருமண விழா மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

-விளம்பரம்-

அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது. பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக மும்பையிலிருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

இதையும் பாருங்க : விஜய்யை குறித்து சொன்ன அந்த ஒரு வார்தையால் Sarcastic என்று கேலி செய்த நெட்டிசன்கள் – கமல் கொடுத்த விளக்கம். வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் :

கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு வருபவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்று மணமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

திருமணத்தில் போட்ட கட்டுப்பாடு:

ஆகையால், பெரும்பாலனவர்கள் அப்படியே பங்கேற்று இருந்தார்கள். திருமணம் நடைபெறும் கடற்கரை வீதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த திருமண நிகழ்வு ஓடிடி ஒன்றில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஆடம்பரமாக பிரம்மாண்டமாய் திருமணம் நடத்தி இருந்தார்கள். இவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து சில மணி நேரங்கள் கழித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் மணமக்களின் திருமண உடைகள் மிகவும் ஆடம்பரமாகவும் தனித்துவமாகவும் காட்சி அளித்திருந்தது . தற்போது நயன்தாரா- விக்னேஷ் சிவன் உடைய ஆடை குறித்து தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

நயன்தாரா புடவை குறித்த தகவல்:

இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் இருவருடைய விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். நவீன காலத்திற்கு ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப் பட்டிருந்தது. பார்டரில் வரலாற்று சிறப்புமிக்க கொய்ராலா கோயில்களின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஏன்னா, திருமணத்தில் பாரம்பரிய கூடிய நவீன மயமான உடையை அணிய வேண்டும் என்பதில் நயன்தாரா தீர்மானமாக இருந்தாராம். பல்வேறு யோசனைகளுக்கு பிறகு ஜேட் குழுமத்தின் டிசைனர் மோனிஷா ஷாவிடம் பழங்கால கோவில்களின் கட்டடக்கலையை சாராம்சங்களை தழுவி திருமண ஆடையை வடிவமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். பின் நயன்தாராவின் விருப்பத்திற்கு ஏற்ப சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற கொய்சாலா கோயில்களைப் பற்றி மோனிஷா கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவன் ஆடை:

இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோவில்களின் சிற்பங்கள் தான் நயன்தாராவின் சிவப்பு நிற ஆடையில் எம்ராய்டு ஆக போடப்பட்டிருந்தது. மிக நீளமான பல்லு, சிவப்பு நிற நெட் துணியில் ஆன வெய்யில் (மகளிர் திருமணத்தின் போது அணியும் முக்காடு) ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் இருக்கிறது. இந்த ஆடை உடுத்துவதற்கு ஏற்ப மிகவும் குறைவான எடையில் வடிவமைக்கப்பட்டு இருந்தார்கள். இந்து புராணங்களின்படி லக்ஷ்மி தெய்வம் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் குறிக்கிறது. எனவே மணமக்களின் உடைகளில் கைகளைச் சுற்றி லட்சுமியின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஒற்றுமை. அர்ப்பணிப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை குறிக்கும் வகையில் மணமக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் பெயர்கள் அதில் குறிக்கப்பட்டிருந்தது. மணமகன் விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார்.

Advertisement