கேம் ஷோவில் ஏற்பட்ட விபத்து. மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நீபா.

0
14365
neepa
- Advertisement -

தொலைக்காட்சியில் பல்வேறு விதமான கேம் ஷோக்கள் ஒளிபரப்பாகி கொண்டுதான் வருகிறது. தொலைக்காட்சிகள் ஒவ்வொன்றும் தனக்கு போட்டியான தொலைக்காட்சியை மிஞ்சும் விதமாக வெவ்வேறு வித விதமான கேம் ஷோக்களை நடத்தி வருகின்றன.ர் அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் மாம் 2 என்ற பெண்களுக்கான கேம் ஷோ நடந்து வருகிறது. இந்த கேம் ஷோவில் முதல் சீசன் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
serial actress neepa daughter க்கான பட முடிவு

இந்த சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி துவங்கப்பட்டது. மேலும், இந்த சீசனை பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பதற்கான ஓட்டிகள் மிகவும் கடமையாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த கேம் ஷோவில் பங்கு பெற்றுள்ள நீபாவிற்கு எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தனது 27 வருட சினிமா பயணத்தில் இயக்குனராக மாறிய விஜய் ? செம மாஸ் தகவல் இதோ.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நீபா. அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தார். மேலும், இவர் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தீபாவிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது மேலும் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறார். மேலும், இவர் சூப்பர் மாம் சீசன் 2வில் மிகவும் கடினமான போட்டியாளராகவும் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
சூப்பர் மாம் Season-2 | ஞாயிறு தோறும் இரவு 8.00 மணிக்கு

Task.. Task.. ன்னு சொல்லி நீபாவ Ambulance ல ஏத்திட்டீங்களேப்பா!?Super Mom season 2ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு#SuperMom #Season2 #ZeeTamil

Zee Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಮಾರ್ಚ್ 3, 2020

சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ப்ரோமோவில் டாஸ்க் ஒன்றை செய்து கொண்டு இருக்கும் நீபா தண்ணீர் நிரம்பிய தொட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் தூணில் இருந்து தாவி தாவி குத்திகிறார். கட்டத்தில் தாண்ட யோசிக்கும் நீபா பின்னர் ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணில் தாவும் போது அவரது முகம் பலமாக மோதிவிடுகிறது. இதனால் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லபடுகிறார்.

Advertisement