சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கேப்டன் மகன் தொடர்பான ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இருக்கும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட மூலம் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலமாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10:
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. வாரம் வாரம் வித்தியாசமான கான்செப்ட்டில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் என்றென்றும் கேப்டன் சுற்று நடைபெறுகிறது. இதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=VpGZmyuG6o4
நிகழ்ச்சியில் கண்கலங்கிய சண்முக பாண்டியன்:
அப்போது நிகழ்ச்சியில் விஜயகாந்தினுடைய பாடல்கள் பாடப்பட்டது. அதை கேட்டு சண்முக பாண்டியன், விஜயகாந்த் குறித்து நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் விஜயகாந்தின் ரசிகர் ஒருவர், எங்கள் ஊரில் மூன்று மதங்களையும் ஒன்றிணைத்தவர் விஜயகாந்த் தான் என்று அவருக்காக ஒருபாடலை பாடி இருக்கிறார். அதன் பின் வாய் சரியாக பேச முடியாத ரசிகர், விஜயகாந்த் பிரிவை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இதை கேட்டவுடன் சண்முக பாண்டியன், இதனால் தான் நான் சினிமாவில் 10 வருஷம் நடிக்காமல் இருந்தேன் என்று அந்த ரசிகரை கட்டிபிடித்து அழுது இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=Gl62-8f5onE
விஜயகாந்த் குறித்த தகவல்:
தற்போது இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும்,ரசிகர்கள், பொது மக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி, ‘பத்மபூஷன்’ விருது சில மாதங்களுக்கு முன்பே இந்திய அரசு அறிவித்து இருந்தது.

விஜயகாந்த் மறைவு:
பின் அவரின் மறைவுக்குப் பிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் அந்த விருதை பெற்றுக் கொண்டார். இதற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தேமுதிக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோஷப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . விஜயகாந்த் மறைந்தாலும் அவரின் நினைவுகள் நீங்கவில்லை. பல இடங்களில் அவருக்காக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.






