இவங்களுக்கு தான் முதல் பரிசு கொடுத்திருக்கனும் .! விஜய் டீவியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.!

0
1080
Super-Singer
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சி நேற்றுடன் (ஏப்ரல் 21)நிறைவடைந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் 10 ஆண்டுகளை கடந்து இசைத் துறைக்கு பல இளம் பாடகர்களை தந்துள்ளது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்கள் தற்போது சினிமா துறையில் ஜொலித்து வருகின்றனர். இதுவரை இந்த சீஸனின் இறுதிப் போட்டியில் தேர்வான அஹானா, சின்மயி, அனுசுயா, சூர்யா மற்றும் பூவையர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்த தொடரின் வெற்றியாளராக ரித்விக் அறிவிக்கப்பட்டார் அவருக்கு முதல் பரிசாக 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது. மேலும், இரண்டாவது இடத்தை சூர்யா தட்டிச்சென்றார், அவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பரிசை அனைவரின் அபிமான பாடகர் ஆன பூவையார் வென்றார் அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு பல்வேறு போட்டிகள் நிலவிய அனுஷாவிற்க்கு பரிசே வழங்கவில்லை. ஆனால், அவருக்கு பதிலாக ரித்விக் முதல் பரிசை வென்றது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே போல அனுஷயாவிற்கு முதல் பரிசு வழங்கபட்டிருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதனால் விஜய் தொலைக்காட்சி பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement