நானும் மனுஷன்தா, இனிமே சூப்பர் சிங்கர் பக்கமே வர மாட்டேன் – சூப்பர் சிங்கர் 8 நடுவரின் ஷாக்கிங் பதிவு.

0
14937
supersinger
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இப்படி ஒரு நிலையில் இனி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் தான் பங்குபெற போவது இல்லை என்று பென்னி தயாள் பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

பின்னணி பாடகரான பென்னி தயாள், சூப்பர் சிங்கரின் ஒரு சில சீசன்களின் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், இனிமேல் சூப்பர் சிங்கர் சம்பந்தமாக எதையும் நான் பதிவிட மாட்டேன் என்னை திட்டி தீர்த்து வரும் மெசேஜ்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி நானும் சாதாரண மனிதன் தான் என்னால் முடியவில்லை நன்றி அடுத்த சீசனிலும் உங்களை சந்திக்க மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இது என்ன அப்படியே இருக்கு – பொல்லாதவன் படம் காப்பியா? வெற்றிமாறனை கேலிக்கு உள்ளாக்கிய வீடியோ.

- Advertisement -

பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது ஸ்ரீதர் வெளியே ஏறியதில் இருந்தே இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள் எனவே ரசிகர்களின் வசை பாட்டை தாங்க முடியாமல் தான் பென்னி தயால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement