விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அஜய் - ஜெஸ்ஸி திருமணம் :
கடந்த மே 13 ஆம் தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கண்ணான கண்ணே பாடலை அஜய் பாடின வீடியோவை பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்தவர் தான் ஜெஸ்ஸி. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்களுடைய உறவு பின் நாளடைவில் காதல் மலர்ந்தது. பிறகு இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக முடிந்து இருந்தது.
View this post on Instagram
மேலும், திருமண வேலைகள் முழுவதையுமே ஆசை ஆசையாக இருவருமே கவனித்து சிறப்பாக தங்களுடைய திருமணத்தை நடத்தி இருந்தனர். தன் திருமணம் குறித்து பேசிய அஜய் என் மூன்று அக்காக்கள் என்னை ரொம்ப அன்பா பார்ப்பார்கள். அதே மாதிரி ஜெஸியும் என்னை கவனித்து கொள்கிறாள். எங்க அக்காவுக்கு நீளமான முடி இருக்கும். இப்ப நீளம் எல்லாம் குறைந்து விட்டது. ஆனால், அவர்களுக்கும் எனக்கு வர மனைவிக்கு நீளமான முடி இருக்கணும்னு ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது.
இரு மத முறைப்படி திருமணம் :
அதேபோல் ஜெசிக்கு ரொம்பவே நீளமான முடி. அதுவும் அவங்க கிட்ட எனக்கு ரொம்பவே பிடித்தது.நெருங்கிய சொந்தங்களுடன் எளிமையான முறையில் எங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், இன்று எங்களுடைய திருமணத்தில் மீடியா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். நான் இந்து, ஜெஸ்ஸி கிறிஸ்டின் என்பதால் இரு மத முறைப்படியும் எங்களுடைய திருமணம் நடைபெற்றது என்றும் கூறி இருந்தார்.

புதிய வீடு :
அஜய்க்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்து நிலையில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதுவும் அஜய்யின் பிறந்தநாளில் இந்த பரிசை அளிப்பதாக அவரின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது சொந்தமாக புது வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார். அவர் புது வீட்டுக்கு மனைவி மற்றும் மகன் உடன் கிரஹப்பிரவேசம் செய்திருக்கிறார்.