சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தும் விலகும் மா கா பா ஆனந்த் – என்ன காரணம்ன்னு நீங்களே பாருங்க (இவர் இல்லன்னா எப்படிபா)

0
594
makapa
- Advertisement -

விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மா கா பா ஆனந்த் நிகழ்ச்சியில் இருந்து சின்ன பிரேக் எடுத்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை நிகழ்ச்சி, சீரியல்களும் தான் மக்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலில் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதிலும் சமீபகாலமாக நகைச்சுவை கலந்த ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் முதல் இடத்தில் விஜய் டிவி இருக்கிறது என்று சொல்லலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
ma-ka-pa

அந்த அளவிற்கு விஜய் டிவிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சிகளுக்கு இணையாக அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமாக இடம் பிடிக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக திகழ்பவர் மாகாபா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதற்கு பின் இவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

- Advertisement -

மா கா பா ஆனந்த்தின் சின்னத்திரை பயணம்:

அதனை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல வருடமாக ஆங்கரிங் செய்து வருகிறார். இருந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர், கிங்ஸ் சூப்பர் டான்ஸ், ஜூனியர், அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ராமர் வீடு என விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் மாகாபா ஆனந்த் படு பேமஸ் என்று சொல்லலாம். மேலும், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் மாகாபா ஆனந்த் நடிகர் ஆனார்.

makapa

மா கா பா ஆனந்த் நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு, நவரச மாணிக் உள்ளிட்ட பல படங்களில் மாகாபா ஆனந்த் நடித்திருக்கிறார். தனியாளாக மொத்த நிகழ்ச்சியும் அசால்டாக ஆங்கரிங் செய்வதில் கெட்டிக்காரர். இவருடைய பேச்சும், காமெடிகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது. தற்போது இவர் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் ஆங்கரிங் மட்டுமில்லாமல் சொந்தமாக யூடியூப் சேனலுக்கு நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் துபாய் சென்ற வீடியோவை பதிவிட்டிருந்தார். அது பயங்கரமாக ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

-விளம்பரம்-

ப்ரியங்கா- மாகாபா ஆனந்த் காம்போ :

அதேபோல் ப்ரியங்கா- மாகாபா ஆனந்த் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல ஆண்டுகாலமாக நிகழ்த்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டு இருந்ததால் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் உடன் மைனா நந்தினி தான் தொகுத்து வழங்கி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிரியங்கா சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு ஹைதராபாத் சென்றிருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

மாகாபா ஆனந்த் எடுக்கும் பிரேக் :

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து மா கா பா ஆனந்த் பிரேக் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், மா கா பா ஆனந்த் அவர்கள் சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு தாய்லாந்து சுற்றுலாசெல்கிறார். வரும் ஏப்ரல் 14 முதல் தாய்லாந்தில் பொழுதை கழிக்கப் போவதாக மா கா பா ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்படினா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்ற சந்தேகம் எழுந்தது. மா கா பா ஆனந்த் துபாய் சென்ற போது குரேஷி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் மாகாபா தாய்லாந்து செல்லும் போது மீண்டும் குரேஷி அல்லது தீனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement