“உங்க அப்பா பாத்தாலும் பயம்” போன வாரம் தன்னை வச்சி செய்த பூஜாவை இந்த வாரம் வச்சி செய்த DJ ப்ளாக்.

0
244
pooja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி :

தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடிகளுக்கும், அட்ராசிட்டியும் இவருடைய பங்கு உண்டு. அதிலும் இந்த சீசன் தொடங்கியதில் இருந்து பூஜாவுக்கு இவர் போடும் சில பாடல்களுக்கு எல்லையே கிடையாது.

டிஜே பிளாக்கை வெளுத்து வாங்கிய வீடியோ:

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் பூஜாவின் அம்மா நீங்கள் செய்வது சரியில்லை. ஒரு பெண்ணை குறித்து இப்படி எல்லாம் பாடல் போடுவதா? எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றெல்லாம் கடுமையாக பேசினார். இதைக்கேட்டு டிஜே பிளாக்- பூஜா உடன் அரங்கில் இருந்தவர்களும் அதிர்ந்து போய்விட்டார்கள். இதனை தொடர்ந்து அது பிராங்க் என்று கூறினார். ஆனால் தன்னுடைய பாடல்களின் மூலம் அனைவரையும் கலாய்க்கும் டிஜே பிளாக் அந்த நிமிடம் பயந்து விட்டார் என்று தான் சொல்லவேண்டும்

-விளம்பரம்-

வைரல் வீடியோ :

இந்த நிலையில் தான் தற்போது இந்த வாரத்தின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சரியான கவுண்டர் பாடல்களை போட்டு டிஜே பிளாக் கலக்கியுள்ளார். அந்த வீடியோவில் பூஜா வரும் போது “மறக்குமா ஜெஞ்சம்” என்ற பாடலை டிஜே போடுகிறார். அதற்கு பிறகு கடந்த வாரம் நடந்த சம்பத்தை நினைவு கூறும் விதமான ஜி.பி முத்துவின் “ஏன் இப்படி அசிங்கப்பத்திவிட்டே” என்ற வசனம் வருகிறது.

பூஜாவுக்கு பாடல் :

இதனை தொடர்த்து பூஜாவிடம் “போன வாரம் உங்க பெரியம்மா செய்ததெல்லாம் அவனுடைய வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூற உடனே “உங்க அப்பா பாத்தாலும் பயம்” என்ற பாடலை போட அரங்கமே கலை காட்டுகிறது. இந்நிலையில் பூஜா இந்த சம்பவத்தினால் பிளாக்கின் ரசிகர்கள் திட்டியது குறித்து சொல்லி ரசிகர்களுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூற “அதை வேற ஞாபகபடுத்தி விட்டீர்கள்” என்று சிங்கமுத்து வசனத்தை ஒளிபரப்பி அரங்கத்தை அதிர வைக்கிறார் டிஜே பிளாக். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement