தோளில் ட்ராகன் குட்டி, கிழவி போன்ற மேக்கப் – சூப்பர் சிங்கர் பிரகதி பதிவிட்ட புகைப்படம். வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

0
1423
pragathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வரும் இரண்டு விதமான நிகழ்ச்சிகளிக்கும் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் பிரகதி. 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த பிரகதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்தார் அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிய கிரகத்தை தொலைக்காட்சியில் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார் பிரகதி.

-விளம்பரம்-
1

சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

மேலும், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை ‘ படத்தில் ஒரு கதாபத்திரத்திலும் நடித்திருந்தார் பிரகதி.அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இவரை முன்னணி கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது ஆனால் அந்த படத்தை பற்றிய அறிவிப்பு அப்படியே நின்றுபோனது இருப்பினும் பிரகதி தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார்.இதுவரை தமிழில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் பிரகதி.

தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் பிரகதி, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கிழவி போல மேக்கப் போட்டுக் கொண்டு தோளில் டிராகன் இருப்பது போல இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை கண்ட பலரும் ‘நீங்கள் என்ன பெரம்பலூரா’ என்று கேலி செய்து வருகின்றனர். சமீபத்தில் பெரம்பலூரில் கிடைத்த படிம உருண்டைகளை டனோசர் முட்டை என்று கிளப்பி விட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-
Advertisement