வேந்தர் டிவி, ஜீ தமிழ் என்று பல சிங்கிங் போட்டியில் கலந்துகொண்டுள்ள சூப்பர் சிங்கர் பைனலிஸ்ட். சூப்பர் சிங்கரிலாவது பட்டம் வெல்வாரா?

0
11272
sridhar
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. விஜய் டிவியில் இது சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது . இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றே சோசியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கப்பட்டது. பல வாரங்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

இது குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்தது. ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது. முத்து சிற்பி, அணு, அபிலாஷ் மற்றும் பரத் என நான்கு பேர் பிரமாண்ட இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் இதுவரை வெளியேறிய போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்ட் ரவுண்டு நடந்தது.

இதையும் பாருங்க : இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள சங்கவி – கொடுத்து வச்சவங்கபா 90ஸ் கிட்ஸ்.

- Advertisement -

இதில் பாடிய அனைவருக்கும் வோட்டிங் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இது வரை ஸ்ரீதர் சேனாவுக்கு தான் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்து உள்ளது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த மாதிரி சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் ஸ்ரீதர்சேனா தற்போது பைனல் போட்டிக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சரிகமப சிங்கர் நிகழ்ச்சி மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த நிகழ்ச்சியில் டாப் 25 போட்டியாளர்களில் ஒருவராக ஸ்ரீதர் சேனா பங்கு பெற்று பாடியுள்ளார். தற்போது இவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல இவர் வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான V Voice நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுள்ளார். ஆனால், எதிலும் இவர் மகுடம் சூடவில்லை.

-விளம்பரம்-
Advertisement