சூப்பர் சிங்கர் மாளவிகாவிற்கு திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா ? அழகிய ஜோடியின் புகைப்படம்.

0
12435
malavika

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இது சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது. அதிலும் சூப்பர் சிங்கர் என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் பல சீசன்களை கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சூப்பர் சிங்கர் சீசன் 8 படு கோலாகலமாக துவங்கி தற்போது பைனல் நோக்கி செல்கிறது.

அதோடு விரைவில் இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 பைனல் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் மாளவிகா. இவர் பிரபல வீணை வாசிப்பாளர் ராஜேஷ் வைத்யாவின் மகளாவார். இந்நிலையில் ராஜேஷ் வைத்யாவின் மகள் மாளவிகாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : கேரளாவில் பெருகி வரும் போட்டோ ஷூட் பேஷன் – கோவிலில் எல்லை மீறிய நடிகை கைது. என்ன செய்துள்ளார் பாருங்க.

- Advertisement -

மேலும், மாளவிகா தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இவர்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களுடைய திருமண தேதி குறித்தும் கேட்டு வருகின்றனர்.

ராஜேஷ் வைத்யா அவர்கள் தென்னிந்திய சினிமாக்களில் பல மொழிகளில் பல படங்களில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். இவர் மிகச் சிறந்த வீணைக் கலைஞர் என்ற பட்டம் பெற்றவர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியில் கலந்துகொண்ட மோகன் வைத்தியநாதன் இவருக்கு அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement