ஊரடங்கு நாளில் தாயுடன் சேர்ந்து டப்பாங்குத்து. சூப்பர் சிங்கர் பிரகதியின் டிக் டாக் வீடியோ.

0
5996
pragathi

நாடு முழுவதும் தற்போது பெரும் ஆபத்தான நிலையை உருவாகியுள்ளது இந்த கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுவரை 446 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் 36 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ,9 பேர் இந்த கொடிய இதனால் இந்தியாவில் பலியாகி இருக்கிறார்கள். மேலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 எட்ட இருக்கிறது அதேபோல டெல்லி உத்தர பிரதேசம் குஜராத் பஞ்சாப் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is 1-3-642x1024.jpg

- Advertisement -

அதேபோல தமிழகத்திலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் இந்த வைரஸ் ஆனது மூன்றாம் கட்டத்தை நெருங்கி வருகிறது. அதாவது இதுவரை வெளிநாட்டிலிருந்து வராத ஒருவருக்கு தமிழகத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இப்படி அச்சத்தால் நாடு கடும் பீதியில் இருந்து வருகிறது இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட சுய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் பாருங்க : கேவலமா இருக்கு,சத்தியமா பாக்க முடியல. கிண்டலுக்குள்ளான ஈரமான ரோஜாவே பவித்ராவின் புதிய கெட்டப்.

-விளம்பரம்-

இந்த ஊரடங்கு உத்தரவிற்கு தமிழகத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது மேலும் வீட்டில் இருந்தபடியே மக்கள் அனைவரும் தங்கள் பொழுதை குடும்பத்தினர் உடன் கழித்தார்கள் அந்த வகையில் பிரபல பாடகியான பிரகதி ஊரடங்கு உத்தரவால் தனது தாயுடன் பொழுதை கழித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் பிரகதி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார் பிரகதி.

சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இவரை முன்னணி கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது ஆனால் அந்த படத்தை பற்றிய அறிவிப்பு அப்படியே நின்றுபோனது இருப்பினும் பிரகதி தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார்.

Advertisement