காசுக்காக உடம்பை காட்ட தொடங்கீடீங்க – தன்னை பற்றி வந்த மோசமாக விமர்சனத்திற்கு பிரகதி பதிலடி.

0
1801
pragathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வரும் இரண்டு விதமான நிகழ்ச்சிகளிக்கும் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் பிரகதி. 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த பிரகதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் வளர்ந்தார் அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடிய கிரகத்தை தொலைக்காட்சியில் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மேலும் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் பெற்றார் பிரகதி.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை ‘ படத்தில் ஒரு கதாபத்திரத்திலும் நடித்திருந்தார் பிரகதி.அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இவரை முன்னணி கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது ஆனால் அந்த படத்தை பற்றிய அறிவிப்பு அப்படியே நின்றுபோனது இருப்பினும் பிரகதி தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார்.

- Advertisement -

இதுவரை தமிழில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் பிரகதி. மேலும், தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார் பிரகதி. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி சமீபத்தில் பீச்சில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதே போல தனது சமூக வலைதளப் பக்கத்தில் பீர் குடிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இது தான் என் முதல் பீர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் வலைத்தளம் ஒன்றில் பிரகதி, குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் அவருக்கு ஆண் நபர்களின் சகவாசம் அதிகரித்து விட்டதாகவும் காசுக்காக இப்படி உடம்பை காட்டி நிலைமைக்கு வந்து விட்டீர்களா என்று ரசிகர்கள் அதிருப்தி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிரகதி பலர் இதனை புகார் அளிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் இது போன்ற மீடியாக்கள் ஓர்த் கிடையாது. இதற்காக நம்முடைய நேரமும் சக்தியும் தான் விரயம் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement