மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா ? – விரைவில் வீடியோ ரிலீஸ்.

0
425
Priyanka
- Advertisement -

மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா இணைந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று பிசாசு.

- Advertisement -

பிசாசு படம்:

கடந்த 2014 ஆம் ஆண்டு ‘பிசாசு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். மேலும், முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய மிஸ்கின் அவர்கள் கூறியிருந்தார்.

பிசாசு 2 படம்:

இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. படத்தில் ஆண்ட்ரியா அவர்கள் நிர்வாணமாகப் போஸ் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

பிசாசு 2 படத்தின் புரோமோஷன் பாடல்:

இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் முதன்முறையாக ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருடைய திரைப்பயணம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிசாசு படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் பிரியங்கா:

அந்த வீடியோவில், சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்து இருக்கிறார். நெஞ்சே கேளு என்ற டைட்டிலில் பிசாசு 2 படத்தின் புரோமோஷன் பாடல் வெளியாக இருக்கிறது. அதில் ஆண்ட்ரியா மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். இந்த பாடலை கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்த பாடலின் படப்பிடிப்பு ஈசிஆர் கடற்கரை அருகே நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாடல் வீடியோ கூடிய விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

Advertisement