‘எங்க குழந்தையும் தான் கஷ்டப்படுறாங்க’ – விஜய் டிவி நிகழ்ச்சியால் கேலிக்கு உள்ளானது குறித்து செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி.

0
793
rajalakshmi
- Advertisement -

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் புஸ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘வாய்யா சாமி’ என்ற பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலை தமிழில் பாடியவர் ராஜலட்சுமி.

-விளம்பரம்-

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். அதன் பிறகு இவர் பல படங்களில் பாடி உள்ளார்கள்.

- Advertisement -

நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்:

இது ஒரு பக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ஸ்டார்ஸ் கிட்ஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் பிள்ளைகளை வைத்து கலாட்டாவாக எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ராஜலட்சுமி, நிஷா, ஈரோடு மகேஷ் கொண்ட பல பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்று சொல்லி கண்ணீர்விட்டு அழுதார்கள். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பலரும் பலவிதமாக கேலி கிண்டல் செய்திருந்தார்கள்.

ராஜலக்ஷ்மி அளித்த பேட்டி:

அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ராஜலட்சுமியும் அவருடைய கணவர் செந்திலும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்கள். அதில் அவர் கூறி இருப்பது, சின்ன இசையமைப்பாளர், பெரிய இசையமைப்பாளர் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க மாட்டோம். வாய்யா சாமி பாடலுக்கு டிஎஸ்பி சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு கால் வந்தது. என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் எங்களுடைய பாட்டெல்லாம் அல்லு அர்ஜுன் சார் கேட்டிருக்கிறாராம். தெலுங்கில் கொடுத்த பேட்டியில் கூட அல்லு அர்ஜுன் சார் எங்களை பற்றி பேசியிருந்தார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

-விளம்பரம்-

சமூக வலைத்தளத்தில் எழுந்த கிண்டல்:

அதேபோல் குழந்தைகளை மிஸ் பண்ணுகிறோம் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தோம். அதற்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கிண்டல் கேலி பண்ணி இருந்தார்கள். அந்த உணர்வு ஒவ்வொரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புரியும். அவர்கள் குழந்தை இப்படி இருக்கிறது? இவர்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறது? என
யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது ரொம்ப கஷ்டமான விஷயம். அதே போல் இதுவும் கஷ்டம் தான் ஒருவருடைய கஷ்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமே தவிர கேலி செய்யாதீர்கள். இது நம்முடைய தப்பு இல்ல சமூகத்தோடு குற்றம்.

பதிலடி கொடுத்த ராஜலக்ஷ்மி:

அவர்கள் செய்கிற விமர்சனம் எல்லாம் கேலி செய்வது போலவே இருக்கிறது. அதுதான் வருத்தத்தை தருகிறது. அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் அவ்வளவு கஷ்டத்தை பார்க்கிறார்கள் என்றால் எங்கள் பிள்ளைகளும் தான் கஷ்டத்தை பார்க்கிறார்கள். அவர்கள் பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு எப்படி சம்பாதிக்கிறார்களோ? அதேபோல் தான் எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சம்பாதிக்கிறோம். அதை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் எங்களுடைய கருத்தை என்று கூறியிருந்தார்.

Advertisement