அதிதியால் பறிபோன விருமன் பட வாய்ப்பு ? ஏமாற்றத்தில் புலம்பிய சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ?

0
437
rajalakshmi
- Advertisement -

சங்கர் மகள் அதிதியால் சூப்பர் சிங்கர் பிரபலம் பாடும் வாய்ப்பை இழந்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும்.

-விளம்பரம்-

அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள்.

- Advertisement -

விருமன் படம்:

இவர் மருத்துவம் படித்து முடித்திருக்கிறார். இருந்தாலும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்து விட்டார். விருமன் படத்திற்கு முன்பே இவர் தெலுங்கில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். தற்போது விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழா :

இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் அதிதியால் பாடும் வாய்ப்பை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி இழந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வாய்ப்பை இழந்த ராஜலக்ஷ்மி:

விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை அதிதி பாடி இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்த பாடலை பாட முதலில் ராஜலட்சுமிக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதோடு இவர் அந்த பாடலை பாடி முடித்ததாகவும் , அதன்பின்னர் அவரை நீக்கி அதிதியை பாட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அதிதியால் சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி வாய்ப்பை இழந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிதி மீது கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

அதோடு சமீபத்தில் நடிகை ஆத்மிகா கூட மறைமுகமாக அதிதியை தாக்கிப் பேசி இருந்தார். நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அதிதி நடனம் ஆடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆட தமிழ் சினிமாவின் புதுமுகம் வேண்டும் என்பதற்காக சங்கரின் மகளை தேர்வு செய்து இருந்தார்கள். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதற்கு காரணம் சங்கரின் மகள் என்பதால் தான் அவருக்கு சலுகைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

Advertisement