நாயகியாக களமிறங்கி இருக்கும் ராஜலட்சுமி, வெளியான First Look – என்ன அறம் நயன் மாதிரி தெரியுது.

0
1706
Rajalakshmi
- Advertisement -

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷை தொடர்ந்து தற்போது அவரது மனைவி ராஜலக்ஷ்மியும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார்.

புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் செந்தில் கணேஷ் மனைவி ராஜலட்சுமியும் நாயகியாக களமிறங்கி வருகிறார். தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் விழா ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய ராஜலட்சுமி இது ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க நான் தயங்கினேன் பின்னர் என் கணவர் கொடுத்த தைரியத்தால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது, அதில் அறம் நயன்தாரா லுக்கில் இருக்கிறார் ராஜலட்சுமி.

Advertisement