ஹீரோவாக களமிறங்கிய சூப்பர் சிங்கர் செந்தில்..! படம் பெயர், நடிகை யார் தெரியுமா.? வைரலாகும் போஸ்டர்

0
255

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு போட்டி கடந்த ஜூலை ஞாயிற்றுகிழமை (ஜூலை 15) நடைபெற்றது. இந்த போட்டியில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

senthil

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் லைம் லைட்டாக இருந்து வந்த செந்தில் கணேஷிற்கு தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது இவர் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது செந்தில் கணேஷ் “கரிமுகன் ” என்று படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். செல்ல. தங்கையா என்ற இயக்குனர் இயக்கும் இந்த படத்தை விமல் ப்ரோடக்க்ஷன் தயாரித்துள்ளது.படத்திற்கு வசனம், இசை, பாடல்கள் அனைத்தையும் இயக்குனர் செல்ல. தங்கையாவே பார்த்துக்கொண்டுள்ளார்.

karimugan

கடந்த ஜூலை மாதம் இந்த படத்தில் இருந்து “யாரடி நீ” என்ற பாடல் மட்டும் யூடுயூபில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செந்தில் கணேஷ். படம் வெளியாகும் தேதி குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் வெளிவரவில்லை.