சீமராஜா படத்தில் பாட வாய்ப்பு..! சிவகார்த்திகேயனுக்கு செந்தில் செய்த வேலைய பாருங்க..!

0
322
senthil

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

senthil

இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதி போட்டி கடந்த ஜூலை ஞாயிற்றுகிழமை (ஜூலை 15) நடைபெற்றது. இந்த போட்டியில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் ‘சீமாராஜா’ படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் அந்த படத்தின் புகைப்படம் ஒன்றை தனது காரின் முன் பக்கத்தில் அச்சிட்டுள்ளார்.அந்த போஸ்டரில் இருக்கும் சிவாவின் புகைப்படத்திற்கு செந்தில் கணேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

sivakarthikeyan

பாடகர் செந்தில் கணேஷிற்கு, நடிகர் சிவகார்த்திகேயனை எந்த அளவிற்கு பிடிக்கும் என்று பல முறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் செந்தில் கணேஷிற்கு ,சிவகார்த்திகேயனை இந்த அளவிற்கு பிடிக்குமா என்று நம்மை ஆச்சரியபடவைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.