சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி பாடியுள்ள கொரோனா பாடல்.

0
2681
- Advertisement -

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக்தில் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் 17 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசினால் 24 ஆயிரத்திற்கும் மேல் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-
Corona

Corona padal ?

Senthil Ganesh ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಮಾರ್ಚ್ 26, 2020

இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள்,மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய குடும்பங்களை மறந்தும், உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் இந்த கரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். மேலும், சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாடகர் செந்தில்– ராஜலட்சுமி அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பாடல் ஒன்றை பாடி உள்ளார்கள். தற்போது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ‘எங்கிருந்து எவனோ வரன்னா’ என்ற பாடலை செந்தில்–ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து பாடி உள்ளார்கள். இந்த பாடலில் கொரோனா வைரஸ் தடுக்கும் உணவு முறைகளையும், வழிமுறைகளையும் கூறியுள்ளார். இந்த மாதிரி நிறைய விழிப்புணர்வு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Senthil Ganesh - Rajalakshmi's dream comes true! - Tamil News ...

மேலும், அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்க உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலர் போராடி வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விஜய் டிவியில் பிரபலமான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக செந்தில்– ராஜலட்சுமி இருவரும் கலந்து கொண்டார்கள். இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டையும் தட்டிச் சென்றார்கள். தற்போது சினிமாவில் பிசியாக பல படங்களில் பாடி வருகிறார்கள்.

Advertisement