‘ஓ சாமி.. ஓட்டு போடுங்க சாமி’.. கணவரோடு கானா பாடி ஓட்டு கேட்ட ராஜலக்ஷ்மி, எந்த தொகுதி என்ன கட்சி தெரியுமா ? – வீடியோ இதோ.

0
674
senthil
- Advertisement -

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார். அதோடு இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார்.

- Advertisement -

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி திரைப்பயணம்:

புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாட்டு பாடி ஓட்டு கேட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 10 வருடங்களுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதோடு தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பயங்கரமாக ஆயுதமாக்கி வருகிறார்கள். வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டியிட இருக்கிறது.

-விளம்பரம்-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி:

அதுமட்டும் இல்லாமல் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாட்டு பாடி வாக்கு சேகரித்து உள்ளார்கள்.

செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாட்டு பாடி ஒட்டு கேட்டது:

திண்டுக்கல்லில் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நிற்ப்பவர் சந்தோஷ் முத்து. இவரை ஆதரித்து செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் அந்த பகுதி வாக்காளர்கள் மத்தியில் தெம்மாங்கு, சினிமா பாடல்களை பாடி நூதனமாக வாக்கு சேகரித்தார்கள். சினிமாவில் பாட்டு பாடி வரும் இவர்கள் இருவரையும் பார்த்து மக்கள் அனைவரும் அவர்களை வரவேற்று ஆரத்தி எல்லாம் எடுத்தார்கள். இப்படி இவர்கள் இருவரும் தெம்மாங்கு பாடல்களைப் பாடி ஒட்டு கேட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement