அவ வெக்க படனும், பாடலை சுட்ட ராஜலக்ஷ்மியை வெளுத்து வாங்கிய பாடலுக்கு சொந்தக்காரர். வீடியோ இதோ.

0
2015
senthil
- Advertisement -

செந்தில் கணேஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்டவர். ஆனால், இவர்கள் சென்னையில் தான் வசித்து வருகிறார்கள். இவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்கள். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார். இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டையும் தட்டிச் சென்றார். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல்ல பட்டி தொட்டி எங்கும் தெறிக்க விட்டது என்று சொல்லலாம். அதே போல இவர்கள் இருவரும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல மேடைகளில் பாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இவர்கள் பங்குபெற்ற மேடை நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.

இதையும் பாருங்க : மங்காத்தா படத்தின் Blooper வீடியோ – அஜித் அடித்தது என்ன சரக்கு ப்ரோ என்று கேலி செய்த ரசிகர். வெங்கட் பிரபு பதிலடி.

- Advertisement -

அண்மையில் நடந்த கோவில் திருவிழாவில் நடைபெற்ற மேடை கச்சேரி ஒன்றில் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடலை கலைவாணி என்பவர் தான் இயற்றிப் பாடிய ராஜலட்சுமி பேசியிருந்தார் ஆனால் உண்மையில் அந்த பாடலை மதுரமல்லி என்ற புனைப்பெயரில் பாடல்களை இயற்றி பாடி வரும் டாக்டர் கலைச்செல்வி தான் இந்தப் பாடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியின் கிராமிய பாடல்கள் மிஞ்சும் அளவிற்கு யூட்யூபில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கப் பட்டு இருந்தது.

https://www.youtube.com/watch?v=eKb1RnWN-8M

அந்தப் பாடலை தான்தான் இயற்றி ஆடியது என்பதற்கு ஆதாரமாக இன்றளவும் அந்த பாடல் யூட்யூபில் இருக்கும் நிலையில் யாரோ ஒரு பெண் அந்த பாடலை சொந்தம் கொண்டாடுவது கீழ்த்தரமாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் அந்த பாடலுக்கு உண்மையான சொந்தக்காரியான மதுரை மல்லி, மேலும், மேடையில் ராஜலட்சுமி கூறிய தவறான கருத்தை வாபஸ் பெறவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்ற அளவிற்கு பாடகி மதுரை மல்லி கடுமையான மன உளைச்சலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அதேபோல செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி தன்னுடைய பாடலை திருடியதற்கு மன்னிப்பு கேட்பார்கள் என்றும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் மதுரமல்லி கூறியிருக்கிறார் இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement