சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சிரியர்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அது ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சிக்கு ஓட்டிங் விவரம் வரும் போதிலிருந்தே அனைவருக்கும் தெரியும். மேலும், எல்லோரும் வாயை பிளக்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு கொடுத்து விடுகிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றிய விவரம்:
அதுமட்டுமில்லாமல் சீசனுக்கு சீசன் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக மா கா பா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி சமீபத்தில் தான் ஒளிபரப்பட்டது. இதை மா கா பா ஆனந்த் மற்றும் மைனா நந்தினி தொகுத்து வழங்கி உள்ளார்கள். பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் இதை மைனா நந்தினி தொகுத்து வழங்கி உள்ளார்கள்.
சூப்பர் சிங்கரில் அஜய் கிருஷ்ணா:
தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா தொகுப்பாளினியாக களம் இறங்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை பாடகர்களையும் வியக்க வைத்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். இந்த நிகழ்ச்சி மூலம் தான் அஜய் கிருஷ்ணா மீடியாவுக்குள் நுழைந்தார்.
அஜய் கிருஷ்ணா சினிமா வாய்ப்பு:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடியும் வருகிறார். தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் கிருஷ்ணா- ஜெஸ்ஸி நிச்சயதார்த்தம் :
இந்நிலையில் பாடகர் அஜய் கிருஷ்ணா உடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அப்படி என்ன விசேஷம் என்றால், தற்போது அஜய் கிருஷ்ணாவுக்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பதிவாகியுள்ளது. அந்த அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் திருமணம் எப்போது என்று கேட்டு வருகிறார்கள்.