சூப்பர் சிங்கர் தேஜி ஸ்ரீ உடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த கான்செப்டில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:
அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்:
சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் பல குழந்தைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தேஜு ஸ்ரீ.
தேஜு ஸ்ரீ குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களையும் கூட கவர்ந்தவர் தேஜு ஸ்ரீ. சின்னக்குயில் சித்ராவிற்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களில் தேஜு ஸ்ரீயும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பிறகு தேஜஸ்ரீ என்ன ஆனார்? என்று கூட தெரியவில்லை.
தேஜு ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம்:
இந்த நிலையில் தேஜு ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதை பார்த்து ரசிகர்கள் பலரும் இது நம்ம சூப்பர் சிங்கர் தேஜு ஸ்ரீயா! அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டாரே! என்று கமெண்ட்களை பதிவிட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.