சூப்பர் சிங்கர் சத்யா பிரகாஷ் என்னவானார். அவரது குடும்ப புகைப்படம் இதோ.

0
29703

சூப்பர் சிங்கர் புகழ் சத்ய பிரகாஷ்யின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆமாங்க, சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ் பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். அவருடைய குடும்பம்? அவர் என்ன செய்கிறார்? தற்போதைய நிலைமை என்ன? என்பதைப் பற்றி வாங்க பார்க்கலாம்.. சத்ய பிரகாஷ் அவர்கள் 1990 ஆம் ஆண்டு மார்ச் 18ம் தேதி சோழவந்தான் என்னும் ஊரில் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை பெயர் தர்மர், தாயார் பெயர் பிச்சையம்மாள் ஆகும். இவர் பள்ளிப் பருவத்தை எல்லாம் கோயம்புத்தூரில் முடித்தார். கல்லுரி படிக்கும் போதே தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினார். சத்ய பிரகாஷ் அவர்கள் கர்நாடக இசையில் திறன் பெற்றவர்.

அதோடு முறையாக இவர் கர்நாடக இசையை கற்று கொண்டவர் என்றும் சொல்லலாம். மேலும், சத்ய பிரகாஷ் அவர்கள் கிளாசிக் மியூசிக், பக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவர். சத்யபிரகாஷ் அவர்கள் 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான இசைத் திறமை நிகழ்ச்சி அதாவது ஏர்டெல் சூப்பர் சிங்கரின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சத்யபிரகாஷ் இந்திய அளவில் பிரபலமானர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சத்ய பிரகாஷ் அவர்கள் முதல் இடத்தையும் பிடித்து உள்ளார். பின் இவருக்கு சினிமாவில் படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நடிகர் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த 3 படத்தில் அனிருத் பாடிய ‘போ நீ போ’ என்ற பாடலை சத்ய பிரகாஷ் ரீமிக்ஸ் செய்து உள்ளார்.

- Advertisement -

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளி வந்த சதுரங்க வேட்டை, ஜீவா ஆகிய படங்களில் பாடி உள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் பாடி உள்ளார். இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இடம் பெற்றது என்றும் சொல்லலாம். தற்போது இவர் ஒரு இந்திய பின்னணி பாடகராக திகழ்ந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சத்யபிரகாஷ் அவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பாடி வருகிறார்.

மேலும், தமிழ் சினிமா உலகில் இசையில் புகழ் பெற்று விளங்கிய இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர், அனிருத், ஜிவி பிரகாஷ் என பல பேருடன் சத்ய பிரகாஷ் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது சினிமா உலகில் பல படங்களில் பாடி கொண்டு வருகிறார். சத்ய பிரகாஷ் அவர்கள் பார்கவி என்ற பெண்ணை 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் தான் ஒரு அழகான குழந்தை பிறந்து உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் சத்ய பிரகாஷ் தன் குடும்பத்துடன் (மனைவி, குழந்தையுடன் இருக்கும்) புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement