8 வருட போராட்டம், பேசி வைத்து என்னை நடுவர்கள் ரிஜெக்ட் செய்தார்கள் – சூப்பர் சிங்கர் பிரபலம் சொன்ன தகவல்

0
244
- Advertisement -

பேசி வைத்து என்னை நடுவர்கள் ரிஜெக்ட் செய்தார்கள் என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டியாளர் யாழினி கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து யாழினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, யாழினி என்பவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் 1, 2ல் கலந்து இருந்தார். அதற்குப் பின் மூன்றாவது சீசனில் ஃபைனல் வரையும் வந்திருந்தார். கடைசியாக இவர் ஒன்பதாவது சீசனில் கூட கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

யாழினி அளித்த பேட்டி:

இருந்தும் இவரால் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை. பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் யாழினி, நான் சின்ன பிள்ளையாக இருக்கும்போதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது ஆடிசனில் நான், யமுனை ஆற்றிலே என்ற பாடலை பாடியிருந்தேன். நடுவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ பேசினார்கள். அப்போது என்னை ரிஜெக்ட் செய்வார்கள் என்று தோன்றியது.

சூப்பர் சிங்கர் குறித்து சொன்னது:

அதற்கேற்ப அவர்களும் என்னை ரிஜக்ட் செய்து விட்டார்கள். இன்னும் கற்றுக் கொண்டு வா என்று அறிவுரையும் சொல்லியிருந்தார்கள். அதற்குப் பிறகு நான் சோகமாக வெளியே வந்தேன். அப்போது என்னை வீடியோ எடுத்தவர்கள், உள்ளே என்ன நடந்தது என்று கேட்கும்போது நான் நடுவர்கள் பேசி வைத்துக்கொண்டு என்னை ரிஜெக்ட் செய்தார்கள். இனி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரவே மாட்டேன் என்று சொல்லி இருந்தேன்.

-விளம்பரம்-

கனவு குறித்து சொன்னது:

அந்த வீடியோவை தான் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். என்னுடைய கனவு ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும். என்னுடைய பாடல்கள் பற்றி பலருமே பாராட்டுகிறார்கள். ஒரு சிலர் நான் குட்டையாக இருக்கிறேன் என்று கிண்டல் செய்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. என்னுடைய திறமைக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். அதற்காகத்தான் இப்போதும் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்த தகவல்:

விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது.

Advertisement