ரஜினியின் பாட்சா படம் இந்த படத்தின் சாயல் தான்..!அதில் ரஜினியும் நடித்துள்ளார்..!

0
1599

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களில் பாட்ஷா படமும் ஒன்று.இந்த படத்தை அவரது ரசிகர்களும் மறக்க மாட்டார்கள்.

என்னுடைய வாழ்வில் பாட்ஷா போன்ற படத்தில் நான் மீண்டும் நடிக்க முடியாது என்று ரஜினியே கூட சொல்லி இருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஒரு இந்தி படத்தின் ரிமேக் என்றால் பலரும் சிறப்பார்கள்.

- Advertisement -

ஆனால், உண்மையில் பாட்ஷா படம் அமிதாப் பச்சன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான ‘ஹம்'(Hum) என்ற படத்தின் தழுவல் தான் பாட்ஷா. இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அப்பாவை இழந்த ஒரு அண்ணன் தனது சகோதரர்களுக்காக எப்படி பாடுபடுகிறார். எப்படி எதிரிகளை சமாளிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு.

இந்த படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதே கதையை சற்று மற்றம் செய்து ஒரு டான் கதையாக தமிழில் எடுத்தனர் அது தான் நம்ம பாட்ஷா. பாட்ஷா படத்தை பார்த்துவிட்டு அமிதா பச்சன், ரஜினியை சந்தித்து, ஹம் படத்தை நான் இது போலத்தான் நான் எடுக்க ஆசைப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement