தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின்னர் நடிப்பில் ஜாம்பவான் என்றால் அது உலக நாயகன் கமல் தான். உலக நாயகன் கமல் பல வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திலும் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது இறுதிவரை தெரியாமலேயே போனது.
ஆனால், கமலுக்கு முன்பாகவே இப்படி கதாபாத்திரத்திற்கு பெயர் இல்லாமலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. ரஜினியை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து, படையப்பா போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.கே எஸ் ரவிக்குமார் முதன் முறையாக ரஜினியுடன் கைகோர்த்து 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து படம் மூலம் தான்.
இந்த படத்தில் ரஜினி, அப்பா மற்றும் மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் மகன் ரஜினியின் பெயர் முத்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், ஜமீந்தாராக வரும் ரஜினியின் பெயர் யாருக்கும் தெரியாது. இதுகுறித்து கேஸ் ரவிக்குமார் கூறுகையில்,
அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் எல்லாம் ஒன்றும் வைக்கவில்லை. அந்த கதாபாத்திரம் ஒரு ஜமீன்தார். அதற்கு பெயர் வைத்தோமா இல்லையா? அந்த கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் என்பது கூட எனக்கு ஞாபகம் இல்லை. அதை பற்றி எழுதும் போது கூட அவர் ஒரு ஜமிந்தார் என்று மட்டும் தான் எழுதினோம் என்று கூறியுள்ளார் கே எஸ் ரவிகுமார்.