சிகரெட் பிடித்தபடியே பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ள ரஜினி – அரிய வீடியோ இதோ

0
2402
Rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்றதும் நம் நினைவிற்கு வருவது அவரது ஸ்டைல் தான். அதுவும் அவர் சிகெரட்டை தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் ரஜினி குடி மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டவராகவே தான் இருந்தார். ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் தண்ணி அடித்துவிட்டு ஷூட்டிங்கிற்கு கூட ரஜினி சென்றுவிட்டார். அப்போது கே பி பாலசந்தர், இனி தண்ணி போட்டு ஷூட்டிங்கிற்கு வந்தால் செருப்பால் அடிப்பேன் என்று திட்டி கூட இருக்குறார்.

-விளம்பரம்-

அப்போது முதல் ரஜினி ஷூட்டிங்கிற்கு தண்ணி அடித்துவிட்டு செல்வதையே நிறுத்தி இருக்கிறார். இருந்தும் அவரால் மது மற்றும் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் தான் ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபட்டு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். அதன் பின்னர் முற்றிலும் அந்த பழக்கங்களைவிட்ட ரஜினி தனது படங்களில் சிகரெட் பழக்கத்தை விட்டுவிடும் பட சில அட்வைஸ் வசங்களை பேசி இருந்தார்.

- Advertisement -

அதிலும் பாபா படத்தில் ரஜினி சொன்ன அட்வைஸை கேட்டு அவரது பல ரசிகர்கள் திருந்தி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைபிடித்துக்கொண்டே பேட்டி கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டு கொண்டு இருக்க சிகரெட்டை பிடித்துக்கொண்டே அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி ‘இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான். கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன் நான். நடத்துநராக இருந்தபோதே எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது. காலையிலேயே பாயா ஆப்பம், சிக்கன் 65 சாப்பிடுவேன். சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது.

-விளம்பரம்-

இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றியவர் லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார்.நடத்துநராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும்” என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement