குறிப்பாக அந்த காட்சியில் நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது, வாழை படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட பதிவு

0
134
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி பதிவிட்டிருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாமன்னன்’. இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது சோசியல் மீடியா முழுவதும் மாரி செல்வராஜின் ‘வாழை’ படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

வாழை படம்:

தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ், தன் இளம் வயதிலிருந்து தான் சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரபலங்கள் பாராட்டு:

சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, பாரதிராஜா, மணிரத்னம், வெற்றிமாறன், ராம், மிஸ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் பதிவு:

தற்போது வாழை படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் மனதார பாராட்டி உள்ளார் . இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ படத்தை பார்த்தேன். தமிழில் ஒரு அற்புதமான, தரமான படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார். அதில் அந்தப் பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் நாமே அனுபவிப்பது போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது.

வசூல் சாதனை:

மேலும், படத்தின் கிளைமாக்ஸில் அந்தப் பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கை சோறு சாப்பிட விடவில்லையே என்று பதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் என்று பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் வாரத்திலேயே ரூபாய் 16 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement