‘சிவாஜி’ யில் மொட்ட பாஸ் ரஜினி. தமிழில் எம்.ஜி.ஆர். தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா ? நீங்களே பாருங்க.

0
1304
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும்.

-விளம்பரம்-
சிவாஜி – தெலுங்கு

இந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘சிவாஜி, எந்திரன், 2.0’ என மூன்று மெகா ஹிட் படங்களுக்காக கூட்டணி அமைத்திருந்தார். இதில் ‘சிவாஜி’ திரைப்படம் தான் இவர்களது காம்போவில் வெளி வந்த முதல் திரைப்படம். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், சுமன், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன், பட்டிமன்றம் ராஜா, சண்முகராஜன், பிரமிட் நடராஜன், எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், கொச்சின் கனீஃபா ஆகியோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

‘AVM புரொடக்ஷன்ஸ்’ எனும் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.ரஜினிக்கு தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ரசிகர் பட்டாளமும், மார்க்கெட்டும் உள்ளதால் இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளி வந்தது. படத்தில் ரஜினி ‘மொட்ட பாஸ்’ என்ற கேரக்டரில் கிளைமாக்ஸ்ஸில் வந்து அசத்துவார்.

சிவாஜி – இந்தி

அதுவரை படத்தில் அவரது பெயர் ‘சிவாஜி’ என்று இருக்கும், ‘மொட்ட பாஸ்’-ஆக வரும் போது அவரது கேரக்டர் பெயர் எம்.ஜி.ரவிச்சந்திரன் என்று மாறியிருக்கும். ஹிந்தியில் டப் செய்யப்பட்ட வெர்ஷனில் இதே காட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பெயர் ‘அமிதாப் பச்சன்’ என்று மாற்றப்பட்டிருக்கும். அதே போல தெலுங்கில் மொட்ட பாஸ் ரஜினியின் பெயர் என் டி ஆர் அதாவது நாதெல்ல துளசி ரங்காராவ் என்று மாற்றப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement