கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார்.

இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், படத்தில் விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. அதோடு மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனையும் செய்து இருந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
ரஜினி திரைப்பயணம்:
இதை அடுத்து ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது.

கூலி படம்:
இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட நாயகன் ரஜினிகாந்த், எப்போதெல்லாம் இந்த ரஜினிகாந்த் என்ற மரம் விழ போகிறதோ அப்போதெல்லாம் என் ரசிகர்கள் என்னை தூக்கி விடுகிறார்கள். நான் அவர்களுடைய பாதங்களை தொட்டு வணங்க வேண்டும். என்னுடைய வெற்றிக்கு பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது. அது உழைப்புக்கு அப்பாற்பட்டது.
விழாவில் ரஜினிகாந்த்:
அதுதான் கடவுளுடைய குரல். உங்கள் குரலையும் கடவுளின் குரலையும் மனதில் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பணமும் புகழும் இருந்தாலும் வீட்டில் நிம்மதியும் வெளியே மரியாதையும் இல்லை என்றால் அந்த பணமும் புகழும் ஒரு பொருட்டாகவே இருக்காது. அனிருத் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. அவன் உச்சத்தில் இருக்கிறான். இந்தியாவின் முதல் ராக் ஸ்டார் அவன் தான். இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதும் ரொம்ப திறமையான ஒரு தகுதியான இளைஞன். அனி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன். படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கிறது, ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் என்று லோகேஷ் சொன்னார். அதற்கு நான், லோகேஷிடம் யார் இதில் நடிக்கப் போகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்று சொன்னார்.
https://www.youtube.com/watch?v=0eRrlZm8l_c
படம் பற்றி சொன்னது:
அவர் உங்கள் படத்தில் நடிக்க அவர் அப்பாவோட படத்தை விட ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என்று சொன்னார். கதை கேட்கும் போதே லோகேஷ், சார் நான் கமல் சார் ரசிகன் என்று சொன்னார். யோவ் நான் உன்னை கேட்டேனா? நீ யார் ரசிகர்னு நான் கேட்டேனா அப்புறம் ஏன்? என்றால் என்று சொன்னேன். அதற்குப் பிறகு தான் அவர் மறைமுகமாக இது ஒரு புத்திசாலித்தனமான கதை, பஞ்ச் டயலாக் பேசுற விஷயங்கள் இல்லை என்றெல்லாம் புரிந்தது. நான் கூலியாக வேலை பார்க்கும் போது நிறைய முறை திட்டு வாங்கி இருக்கிறேன். அப்படி ஒரு நாள் ஒருவருடைய லக்கேஜை ஒரு வண்டியில் ஏற்ற சொன்னார். அதற்காக இரண்டு ரூபாய் டிப்ஸாக கொடுத்தார். அவருடைய குரல் எனக்கு ரொம்ப பழகி போனது போல உணர்வு தந்தது. அதற்கு பின்பு தான் தெரியுது அவர் என்னுடைய காலேஜ் நண்பர். காலேஜ் நாட்களில் அவரை நிறைய கிண்டல் செய்திருக்கிறேன். அப்போது அவர் என்ன ஆட்டம் ஆடினேடா என்றெல்லாம் சொன்னார். அன்று தான் என் வாழ்வில் முதல் முறையாக அறிந்தேன் என்று கூறி இருக்கிறார்.






