தற்போது சோசியல் மீடியா முழுவதும் காதல் சுகுமார் சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்களிடையே பிரபலமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இதுவரை இவர் தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இருந்தாலுமே இவருடைய கதாபாத்திரங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.
மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். அந்த படங்களும் தோல்வி அடைந்தது. அதற்குப்பின் இவர் படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் புகார் கொடுத்திருந்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. துணை நடிகை வடபழனி காவல் நிலையத்தில் காதல் சுகுமார் மீது அளித்த புகாரில், எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. ஆனால், நான் கணவரை விட்டு பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். அதற்கு பிறகு தான் காதல் சுகுமாருடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம்.
சுகுமார் மீது புகார்:
பின் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் சொன்னார். மூன்று வருடங்களாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கும்போதுமெல்லாம் அவர் தாமதம் செய்து வந்தார். அதோடு என்னுடைய நகை, பணம் எல்லாத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டார். இப்போது திருமணம் பற்றி பேசினால், நீ ஏற்கனவே திருமணம் செய்தவள். என்னால் உன்னை ஏற்கனவே செய்து கொள்ள முடியாது என்று சாக்கு சொல்லி தப்பிக்கிறார். என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் துணை நடிகை அளித்த பேட்டியில், சந்தானத்தை வைத்து படம் இயக்குவதாகவும், எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றும் தான் என்னிடம் சுகுமார் அறிமுகமானார்.
துணை நடிகை பேட்டி:
அதற்கு பின் அவர் என்னுடன் நட்பு ரீதியாக பழகி, என்னுடைய குடும்ப விபரத்தை எல்லாம் கேட்டார். நானுமே இயக்குனர் என்ற முறையில் எனக்கு திருமணம் ஆகி தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன் என்றெல்லாம் சொன்னார். உடனே அவர், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நானும் விவாகரத்து செய்து விட்டேன். குழந்தை எதுவும் இல்லை என்று சொன்னார். எனக்கு இரண்டாம் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொன்னேன். இருந்துமே அவர் விடாமல் என்னை கட்டாயப்படுத்தினார்.
சுகுமார் செய்த மோசடி:
பின் நாங்கள் எல்லா விழாக்களிலும், நிறைய தர்கா கோயில்கள் எல்லாம் போனோம். அப்போது அவர் என்னை ஒப்பு திருமணமும் செய்து, படம் ஹிட்டான பின் எல்லோரையும் அழைத்து திருமணம் செய்யலாம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து இருந்தார். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அதை நம்பி தான் அவர் படத்திற்காக கஷ்டப்படும்போது என்னுடைய நகைகள், கடனுக்காக பணம் எல்லாம் வாங்கித் தந்தேன். மூன்று வருடம் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதற்குப்பின் ஒரு நாள் அவருடைய மனைவி போன் செய்து பணம் ரெடியா என்று கேட்டவுடன் எனக்கு சந்தேகம் வந்தது.
சுகுமார் மனைவி செய்த வேலை:
இதைப் பற்றி நான் அவரிடம் பேசும் போது அவருக்கும் எனக்கும் சண்டை வந்து. என்னை அடித்து விட்டு சென்று விட்டார். பின் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது அவர் தன்னுடைய மனைவியுடன் தான் வாழ்கிறார் என்று தெரிந்தது. அதை கேட்க நேரில் போனபோது அவருடைய மனைவியும், குடும்பத்தினரும் என்னை தகாத வார்த்தையில் பேசி இருந்தார்கள். அதற்குப் பின் நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்களும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் இப்போது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.