எனக்கும் சொல்லுங்க ப்ரோ. தமிழ் ஹீரோவிடம் டிப்ஸ் கேட்ட சுரேஷ் ரெய்னா.

0
987
sureshraina
- Advertisement -

உயிரை எடுக்கும் இந்த கொரோனா வைரஸ் மக்களின் மனதில் உயிர் பயத்தை கிளப்பி உள்ளது. இந்தியாவில் கொரோனாவினால் 4778 பேர் பாதிக்கப்பட்டும், 136 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்றும், கூட்டம் கூட கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. கொரோனா விழிப்புணர்வு குறித்து பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து பல பிரபலங்கள் சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்திய கிரிக்கெட் வீரர் பிரபல நடிகரான துல்கர் சல்மானிடன் டிப்ஸ் கேட்டுள்ளார்.

- Advertisement -

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி மகனான துல்கர் சல்மான் மலையாளத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும், தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஊரடங்கு உத்தரவால் மற்றவர்களை போல வீட்டில் இருக்கும் துல்கர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் துல்கர் சல்மான், சண்டே சமையல் என்று குறிப்பிட்டிருந்தார். துல்கரின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, எனக்கும் அந்த சமையல் குறிப்பை சொல்லுங்க ப்ரோ, நானும் வீட்டில் முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ரைனாவின் இந்த பதிவிற்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

துல்கர் சல்மானுக்கு, சுரேஷ் ரெய்னாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா. துல்கர் சல்மான் மிகப்பெரிய சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர். மேலும், சமீபத்தில் விக்ரம் பிரபு மற்றும் துல்கர் சல்மான் இருவரும் சுரேஷ் ரெய்னாவை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்கள். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்த துல்கர் சல்மான, நான் வாழ்க்கை முழுவதும் சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகன் தான் உங்களை சென்னையில் சந்தித்தது மேலுமொரு சிறப்பான தருணமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement