எனக்கு தலையோட அந்த பாட்ட போடுங்க..! ஓட்டுனரிடம் கேட்ட ரெய்னா.! எந்த பாட்டு தெரியுமா.?

0
1127
suresh-raina

சினிமாவில் தல என்று புனை பெயரை கொண்டவர் நடிகர் அஜித் இவருக்கு கிரிக்கெட் வரை ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை இந்திய அணியின் ரெய்னா மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெருமையான விடயமமாக அமைந்துள்ளது.

suresh raina

சினிமாவில் தல அஜித் என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் தல என்று தோணியையும் சின்ன தல என்று சுரேஷ் ரெய்னாவையும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வருவதால் இவர்களை தல , சின்ன தல என்று சென்னை ரசிகர்கலால் அன்போடு அழைக்கபட்டு வருக்கின்றனர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் வீரர்களுக்கு சென்னை மீது ஓரு தனி வித ஈர்ப்பும் ஏற்பட்டது என்றும் கூறலாம். இதனை நிரூபிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் ரெய்னா மைதானத்திற்கு தனது அணியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரிடம் ‘ஆலுமா டோலுமா’ பாடலை போடுமாறு கேட்டுள்ளார்.

aaluma doluma

இந்த தகவலை அந்த பேருந்தின் ஓட்டுனராக பணியாற்றியவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ரைனாவிற்கு அஜித்தின் பாடல் எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்று எண்ணும் போது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கே கிடைத்த ஒரு பெருமை தான் என்று கூறலாம். இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னாவிற்கு ஒரு விசில் போடலமே.