காக்க காக்க பார்க்கும் போது எத்தனாவது படிச்சிட்டு இருந்தேன்னு கேட்டேன் அதுக்கு அந்த பொண்ணு – மேடையில் பிரியங்காவை கலாய்த்த சூர்யா.

0
555
Surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெற்றிருந்தது குறித்து பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். 2019ஆம் ஆண்டு வெளியான காப்பான் படத்திற்கு பிறகு பாண்டிராஜ்- சூர்யா கூட்டணியில் எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் பாடல்களும், டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தை மாஸ், மசாலா ஆக்‌ஷன் கதைக்களத்துடன் இயக்குநர் பாண்டிராஜ் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : அஜித்தை வைத்து ஷங்கர் படம் எடுக்காததற்கு ஜீன்ஸ் படம் தான் காரணமா ? இதோ விவரம்.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய விவரம்:

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். மேலும், இந்த ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த இந்த படத்திற்கான விழாவில் சூர்யா, சத்யராஜ், பிரியங்கா மோகன், இயக்குனர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

விழாவில் சூர்யா பேசியது:

இந்த விழாவில் கலந்துகொண்ட சூர்யா பேசி இருப்பது, முதலில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பி வர பிரார்த்தனை செய்வோம். அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என அனைவருக்குமே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக இவ்வளவு அற்புதமான படத்தை உருவாக்கிய இயக்குனர் பாண்டிராஜுக்கு நன்றி. மூத்த நடிகர் சத்தியராஜ் மாமா எங்களுடைய குடும்ப நண்பர் தாண்டி 45 வருட பழக்கம் மட்டும் இல்லாமல் நல்ல மனிதர், நடிகர். என்னுடைய வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிரியங்கா குறித்து சூர்யா சொன்னது:

அதேபோல் படத்தின் கதாநாயகி பிரியங்கா. இவரைப் பற்றி சொல்லனும் என்றால், ஒரு முறை சூட்டிங்கில் நான் உங்களுடைய காக்க காக்க படத்தை பார்த்து இருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பிரியங்கா சொன்னார். நான் உடனே அவரை தனியாக கூப்பிட்டு, நீ அந்த படம் பார்க்கும்போது எத்தனாவது படித்திருந்தாய் என்று கேட்டேன்? உடனே அவர் நான் மூன்றாவது படித்திருந்தேன் என்று சொன்னார். என் படம் பார்த்த அந்த மூணாவது படித்த நடிகை இப்போது என்னுடன் நடிகையாக நடித்து இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும் :

திரையில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்:

அது மட்டும் இல்லாமல் படத்தில் சில காட்சிகளில் எல்லாம் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். இரண்டு படத்திற்கு பிறகு இவர் இந்த மாதிரி காட்சிகளில் நடித்து இருப்பது மிகவும் பெரிய விஷயம். அவர் இந்த படத்தில் கிடைத்ததற்கு நாங்கள் தான் நன்றி சொல்லனும். அந்த அளவிற்கு அருமையாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவர் அருமையாக நடித்திருந்தார் என்று தெரிவித்திருந்தார். மேலும், சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஒடிடியில் வெளியான நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement