இந்த நடிகரின் படங்களை ஒன்று விடாமல் பார்த்துவிடுவோம் – பாராட்டிய சூர்யா ஜோதிகா, துள்ளி குதித்து ட்வீட் போட்ட இளம் நடிகர்.

0
7887
suryajo
- Advertisement -

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் விக்கி டோனர். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. இவர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் படப்படியாக முன்னேறி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இதை தவிர இவர் பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.

-விளம்பரம்-

அந்த வகையில் இவரின் விக்கி டோனர் படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாண், விவேக் போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதேபோல் இவருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த அந்தாதூன் படமும் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

இதையும் பாருங்க : கண்டிப்பா எல்லா குழந்தைகளுக்கும் இத பண்ணுங்க – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ. குவியும் பாராட்டு.

- Advertisement -

2018ம் ஆண்டு வெளியான ‘அந்தாதுன்’ படம் சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் என மூன்று பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. சீன மொழியில் இந்த படம் வெளியாகி சக்கப்போடு போட்டது. இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து சமீபத்தில் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்று விடாமல் பார்த்து விடுவோம் என கூறி இருந்தனர். அவர் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறினர். இதற்கு ஆயுஷ்மான் குரானா அவர்கள் சூர்யா, ஜோதிகா உங்களின் அன்புக்கு மிக்க நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement