சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து மீண்டும் திரையில் பார்க்கலாமா? சூர்யா கொடுத்த நச் பதில்

0
249
- Advertisement -

ஜோதிகா உடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் சூர்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

கங்குவா படம் :

மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இந்த கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதியே இந்த படம் திரையரங்களில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது. பின் இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

சூர்யா அளித்த பேட்டி:

சமீபத்தில் தான் இந்த படத்தின் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார். போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு பிரமோஷன் விழாவில் நீங்களும் ஜோதிகாவும் எப்போது சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள்? என்று சூர்யாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜோதிகா குறித்து சொன்னது:

அதற்கு சூர்யா, ஒவ்வொரு படமும் ஆர்கானிக்காக நடக்க வேண்டும். திரைக்கதை ஆசிரியர்களும், இயக்குனர்களும் தான் அதை முடிவு செய்யணும். நாங்கள் இருவரும் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறோம் என்பதற்காக ஒரு இயக்குனரிடம் அந்த படத்தினுடைய ரீமேக்கில் எங்கள் இருவரையும் நடிக்க வைக்கிறீர்களா? என்று கேட்க மாட்டோம். எனக்கு பிடிக்காமல் இருந்த கதை ஜோதிகாவுக்கு பிடிக்கும். சில்லுனு ஒரு காதல் படத்தில் எனக்கு சில விஷயங்கள் இப்படி இருந்திருக்கலாம் என்று தோணும். ஆனால், ஜோதிகாவுக்கு அந்த படம் ரொம்ப பிடித்திருந்தது.

சூர்யா-ஜோதிகா திருமணம்:

நான் நடிக்கிறேன் நீ நடிக்கீறியா? இல்லையா? என்று கேட்டார். வேறு ஹீரோ ஜோதிகா உடன் பணியாற்ற வேண்டாம் என்று தான் நான் நடித்தேன் என்று கூறி இருந்தார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். முதலில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் பல வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் பிறகு எடுத்துக் கொண்டு மீண்டும் நடித்து வருகிறார்.

Advertisement