கங்குவா பட ப்ரோமோஷனில் நடிகர் சூர்யாவிடம் செய்தியாளர் சண்டை போட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கங்குவா படம்:
மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியே இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போது இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரெய்லர் இருந்தது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ப்ரோமோசன் பணிகள்:
இப்படி இருக்கும் நிலையில் கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவிடம் மீடியா நபர் சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மும்பையில் நடந்த பிரஸ் மீட்டில் சூர்யா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தாமதமாக வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மீடியாவை சேர்ந்த ஒருவர், எப்படி நீங்கள் இவ்வளவு லேட் ஆக வரலாம்.
View this post on Instagram
சூர்யா வீடியோ:
உங்களால் எவ்வளவு நேரம் ஆகிவிட்டது? பொறுப்பில்லாமல் எப்படி நடந்து கொள்வீர்கள்? நாங்கள் எவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? என்று பேசி இருக்கிறார். ஆனால், சூர்யா கோபப்படாமல் அவரை சமாதானம் செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதில் சிலர், இதே பாலிவுட் நடிகராக இருந்தால் இப்படி எல்லாம் பேசுவீர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.






