‘நீ கார்த்தி இல்லடா, கத்தி’- தனது முதல் கிரஷ் குறித்து பாலய்யாவிடம் சொன்ன கார்த்தி, சூர்யாவின் Reaction

0
182
- Advertisement -

பிரபல நடிகர் சூர்யாவின் கிரஷ் குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்‌. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

கங்குவா படம்:

மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியே இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போது தற்போது இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.

படம் குறித்த தகவல்:

பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரெய்லர் இருந்தது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார். போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருந்தது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு பிரமோஷன் நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

கங்குவா பிரமோஷன்ஸ்:

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடன் பேசியிருக்கிறார். அதில் சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் போனில் பேசியிருக்கிறார்கள். அப்போது சூர்யா குறித்து யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கார்த்தி போட்டுடைத்து உள்ளார். அதில்,’ உங்க அண்ணன் சூர்யாவிற்கு முதல் கிரஷ் எந்த வயதில் வந்தது என்று பாலகிருஷ்ணா கார்த்தி இடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி, ‘சார் நடிகைகள் என்றால் அவருக்கு பயங்கர இஷ்டம் சார்’.

சூர்யாவின் முதல் கிரஷ்:

அதிலும், ‘சிக்கு புக்கு ரயிலே பாட்டில வரும் இல்ல சார்’ என்று கார்த்திக் கூற, ‘யாரு கௌதமியா’ என்று பாலகிருஷ்ணா கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி ஆமா என்றவாறு சிரிக்க. பாலகிருஷ்ணா, நாளைக்கு செய்திகளில் இந்த நியூஸ் தான் ஹாட் டாபிக் என்று கூறியுள்ளார். அப்போது சூர்யா தனது தம்பி கார்த்தியை, ‘கார்த்தி, நீ கத்தி டா, கார்த்தி இல்ல’ என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியா முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

Advertisement