மும்பையில வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டானே ? – சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த சூர்யா.

0
1689
- Advertisement -

மும்பையில் செட்டில் ஆனது குறித்து நடிகர் சூர்யா கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடி ப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இருந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்கள் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி சமீப காலமாக சூர்யா நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. இதனை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார்.

- Advertisement -

சூர்யா நடிக்கும்படம்:

இப்படமானது 3d கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்பையில் சூர்யா சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி வருகிறது.

மும்பையில் வீடு குறித்த சர்ச்சை:

மேலும், நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறி இருக்கிறார். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் கூட சூர்யா தன்னுடைய குழந்தைகளை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகையாளிடம் கோரிக்கை வைத்திருந்தது இணையத்தில் வைரலாகி இருந்தது. சூர்யா வாங்கி இருக்கும் வீட்டின் விலை 70 கோடி என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சூர்யா கொடுத்த விளக்கம்:

இவ்வளவு கோடியில் சூர்யா வீடு வாங்கியதற்கு காரணம் தன்னுடைய அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் மும்பைக்கு சென்றால் அவர்களும் தங்குவதற்கு வசதியாக இருப்பதற்காக இந்த வீடு அதிக செலவில் சூர்யா வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படி சூர்யாவின் மும்பை வீடு குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து சூர்யா கூறியது, சோசியல் மீடியாவில் எல்லாம் நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேன் என்று சொல்கிறார்கள்.

படம் குறித்து சொன்னது:

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய இரண்டு குழந்தைகளும் மும்பையில் படிக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்காகத்தான் நான் அடிக்கடி மும்பை சென்று வருகிறேன். மற்றபடி நான் சென்னையில் தான் இருக்கிறேன். இப்போதைக்கு கங்குவா படத்தின் படப்பிடிப்பு பிசியாக போய்க்கொண்டிருக்கிறது. படம் நினைத்ததை விட பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. நிச்சயம் எல்லோருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் படம் இருக்கும். அதே போல் வாழ்க்கையில் புதுசு புதுசாக விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது நான் மாதவனிடம் கோல்ட் விளையாட்டை கற்றுக் கொண்டு இருக்கிறேன். நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக, மனைவிக்கு நல்ல கணவனாக இருந்து ஜெயிக்கணும் என்று கூறி இருக்கிறார்

Advertisement