அண்ணா பிறந்தநாளுக்கு பாட்டு ரிலீஸ் பண்ண சொன்னா, ஆடி மாசத்துக்கு பாட்ட ரிலீஸ் பண்ணி இருக்கீங்க – கேலிக்கு உள்ளாகும் கங்குவா பாடல்

0
265
- Advertisement -

சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்ட வருகிறது.

- Advertisement -

கங்குவா படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், சூர்யா இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கங்குவா படத்தினுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

முதல் பாடல் வெளியீடு:

இந்த பாடல் உடைய வரிகளை விவேக் எழுதியிருக்கிறார். வி.எம்.மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து ‘ஆதி நெருப்பே, ஆராத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ என்று தொடங்கும் இந்த பாடல் உடுக்கை சத்தத்துடன் பயங்கரமாக பாடி இருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ஆனால், சிலர் இந்த பாடலை கேட்டு, அண்ணா பிறந்தநாளுக்கு பாடலை வெளியிட சொன்னா, ஆடி மாசத்துக்கு வெளியிட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கிண்டல்:

அதோடு இது கங்குவா பாடல் இல்லை, கண்ணாத்தா பாடல் என்று சாமி பாடல்களை மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகிறார்கள். கங்குவா படத்தினுடைய முதல் பாடல் தான் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடைசியாக சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் வெளியாகி இருந்தது. அதன் பின் கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார்.

சூர்யா திரைப்பயணம்:

அதேபோல் மாதவனின் ‘ராக்கெட்டரி தி நம்பி விளைவு’ என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சூர்யா அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறது. இதை அடுத்து இவர் இன்னும் சில படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement