நடிகர் விவேக்கின் இறுதி வீடியோவை பகிர்ந்து சூர்யா போட்ட உருக்கமான பதிவு.

0
12229
surya
- Advertisement -

தமிழக மக்களால் இருந்த சின்னக் கலைவானர் என்று போற்றப்பட்ட நடிகர் விவேக் கடந்த சில மாதங்களுக்கு ங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இதையும் பாருங்க : எனக்கு வேற வழி தெரியல ஆத்தா – விஜய் தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது போல போட்டோ ஷாப் செய்துகொண்ட விக்கி.

- Advertisement -

விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். மேலும், அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விவேக் இறந்தாலும் அவரின் நினைவுகள் மறையவில்லை. இப்படி ஒரு நிலையில் விவேக் நடித்த கடைசி வீடியோ ஒன்றை சூர்யா பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, விவேக்கின் பல படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் விவேக் இறுதியாக பங்கேற்ற ‘எங்க சிரி பாப்போம்’ நிகழ்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள சூர்யா, நம் மனதில் எப்போதும் அவர் வாழ்வார். விவேக் சாரின் இறுதி வீடியோவை பகிர்வதில் பெருமைகொள்கிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார் சூர்யா.

-விளம்பரம்-
Advertisement