தன் காதலனை அறிமுகம் செய்து வைத்த சர்வைவர் நிகழ்ச்சி பிரபலம் – வைரலாகும் புகைபடங்கள் இதோ.

0
237
- Advertisement -

தன்னுடைய காதலனை முதன் முதலாக சோசியல் மீடியாவில் சர்வைவர் பிரபலம் அறிமுகம் செய்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுகொண்டு புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.

-விளம்பரம்-

ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க டான்சானியா ஒளிபரப்பிய நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கனவே இது பல்வேறு வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வருகிறது. இருந்தாலும், இந்த நிகழ்ச்சி தமிழில் வருவது முதல் முறை. அதேபோல இந்த நிகழ்ச்சியில் வந்த டாஸ்க்குகள் பிக் பாஸுக்கே டப் கொடுக்கும் விதமாக தான் இருந்தது.

- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சி:

மேலும், முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது. கடுமையான பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை தட்டி சென்றார். இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதற்கான வீடியோவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

ஐஸ்வர்யா கிருஷ்ணன் குறித்த தகவல்:

இதனை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் விஜயலட்சுமிக்கு வாழ்த்து மழை பொழிந்து இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள். அதில் ஐஸ்வர்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் பிட்னஸ் ட்ரைனர் மற்றும் கடல் சறுக்கு வீராங்கனை ஆவார். இவருக்கு கனவே பிட்னஸ் டிரெய்னர் ஆகுவது தானாம். அதனால் இவர் பல பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சர்வைவர் நிகழ்ச்சி வாய்ப்பு:

இவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணமே இன்ஸ்டாகிராமில் வந்த இவரோட ஸ்டன்ட் வீடியோ தான். இந்த ஸ்டண்ட் வீடியோக்களை பாத்துட்டு தான் ஜீ தமிழ் நிறுவனம் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்பை கொடுத்ததாக பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா கூறி இருந்தார். மேலும், சர்வைவர் ஷோ மூலம் இவர் பல இளசுகள் நெஞ்சை கொள்ளை அடித்து இருக்கிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

ஐஸ்வர்யா கிருஷ்ணன் காதலர்:

அதில் அவர், என்னுடைய காதலர் இவர் தான். இன்று அவரோட பிறந்த நாள் என்று குறிப்பிட்டு தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் அவருடைய காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள். கூடிய விரைவில் இவர்களுடைய திருமண தேதி அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement