சர்வைவரில் இருந்து வந்ததும் தன் கடையின் இரண்டாம் கிளையை திறந்த அம்ஜத் – இந்த கடை இவரது தானா.

0
457
amjad
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த நிகழ்ச்சி சர்வைவர். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரித்து பல போட்டிகள், சவால்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்றது.

-விளம்பரம்-

சர்வைவர் நிகழ்ச்சியில் அம்ஜத் :

மேலும், அனைவரும் எதிர்பார்த்து இருந்த சர்வைவர் நிகழ்ச்சி முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய சாதனை. இது ஒரு பக்கமிருக்க சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்ஜத் கான் பங்கு பெற்றிருந்தார். இவர் மிக திறமையாக விளையாடி வந்தார். பின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் இவர் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

ஆயுத எழுத்துக்கு முன்னும் பின்னும் :

இந்த நிலையில் தற்போது இவர் புது கடை ஒன்றை திறந்து உள்ள புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அம்ஜத். இந்த தொடரில் இருந்து இவர் தீடீரென்று விலகி இருந்தார். இவர் சின்னத்திரை சீரியலில் நடிப்பதற்கு முன் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான புகைப்படம் என்ற திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து வல்லினம், மாயா, நட்பதிகாரம், நெடுநல்வாடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார் அம்ஜத். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த “கைதி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அம்ஜித் கான் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அம்ஜத்தின் இரண்டாம் கிளை :

மேலும், இந்த படம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இவரால் டாப் 5 இடத்தை பிடிக்க முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது joos bunny என்ற கடை ஒன்றை சேலத்தில் திறந்து உள்ளார். அதற்கான புகைப்படத்தை அம்ஜித் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

இது இவருடைய இரண்டாம் கிளை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சேலத்தில் இன்னோரு இடத்தில் joos bunny பண்ணி என்ற கடையை திறந்து இருந்தார். மீண்டும் சேலத்திலேயே இன்னொரு கிளையை திறந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் மூன்றாம் கிளையை திறக்க வாழ்துக்கள் அம்ஜத்.

Advertisement