‘Lpஐ கொச்சையாக பேசியனாரா இனிகோ’ – சர்ச்சையை கிளப்பிய ஐஸ்வர்யா. லட்சுமி பிரியா கொடுத்த விளக்கம்.

0
610
Survivor Lakshmipriya Inigo Issue Here's What Lp Tweeted
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபர்ப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை பல போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது, விஜயலக்ஷ்மி, நாராயணன், அம்ஜத், ஐஸ்வர்யா, இனிகோ, விக்ராந்த், உமாபதி, வெனீசா ஆகியோர் மட்டும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனிகோ , லட்சுமி பிரியா குறித்து ஆபாசமாக கமன்ட் செய்துவிட்டதாக சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ஐஸ்வர்யா.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு டாஸ்க்கில் லட்சுமியை A வடிவ உயர கோபுரத்தில் பிடித்து தூக்கிவிட நேர்ந்த சம்பவம் தொடர்பாக கேமராவின் பின்னால் இனிகோ கொச்சையாக ஏதோ சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அதை குறிப்பிட்டு தான் ஐஸ்வர்யா இப்படி சொல்லி இருக்கிறார் என்றும் தோன்றுகிறது. ஆனால், இனிகோவிற்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது, அதனால் எதிர்ச்சியாக கிராமத்து வழக்கில் சொன்னது அது. வில்லங்கமான நோக்கத்தில் இல்லை என்று கூறினார் விஜி.

- Advertisement -

அதே சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால் கூட அத்தனை விபரீதமாகத் தோன்றாது. ஆனால், தமிழில் சொன்னால் அபத்தமாகி விடும். இதுதான் இந்த தவறான புரிதலுக்கு காரணம் என்றும் கூறி இருந்தார் விஜி. ஆனால், அப்போதும் இனிகோ சொன்னது தவறு தான் என்று கூறிய ஐஸ்வர்யா , “வார்த்தைகளை உபயோகிக்கும் போது கவனமாக பேச வேண்டும் என்று கூற நான் அந்த அர்த்தத்துல சொல்லல. எனக்கு ஆங்கிலமெல்லாம் தெரியாது.

நான் அந்த மாதிரி கேரக்டரும் கிடையாது என்று கூறி கலங்கினார் இனிகோ. இந்த விவகாரம் குறித்து பலர் சமுக வலைதளத்தில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள லட்சுமி பிரியா, “எனது பெயர் இழுக்கப்பட்டதால், நான் இனிகோவை ஆதரித்து இந்த பதிவை போட வேண்டும் என்று உணர்ந்தேன். அவர் தவறான நோக்கத்துடன் எதையும் சொல்ல மாட்டார் என்று நான் நம்புகிறேன்.

-விளம்பரம்-

சில வார்த்தைகள் வேறு மொழியில் சொல்லும்போது வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஐஸ்வர்யாவை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, இது தவறுதலாக புரிந்துகொண்ட விஷயமாக இருந்திருக்கலாம். இருப்பினும் வார்த்தைகளை சரியாக பயன்படுத்து வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி பேசினேன். மேலும், இனிகோ வேறு எந்த ஒரு தவறான நோக்கத்துடன் சொல்லி இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement